Posts

Showing posts from October, 2017

BRAND MANAGEMENT

எந்தவொரு ஒரு மதமானாலும், எந்தவொரு ஒரு இயக்கமானாலும்,எந்தவொரு ஒரு கட்சியானாலும்,எந்தவொரு தனிநபரானாலும் அவர்களுடைய BRAND VALUE என்பது மிக அவசியமானது .இப்படி ஒவ்வொன்றையும் ஒரு நிறுவனத்தைப்போல தொடர்புப்படுத்தி பார்ப்போமேயானால், நாம் எளிதாக இதன் செயல்பாடுகளை புரிந்துக்கொள்ள முடியும். நோக்கம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர்களின் BRAND VALUE குறையாமல் பார்த்துக்கொள்ள அவர்கள் MARKETING செய்தே ஆக வேண்டும். இல்லையென்றால், அவர்கள் போட்டியில் நிலைக்க முடியாது. அவர்களுக்கான முக்கியத்துவம் குறைந்துவிடும்.அந்த இடத்தில வருவதற்கு பலர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.(SOME BRANDS:DMK,ADMK,SUPER STAR,ULAGANAYAGAN) . ஒவ்வொருவரும் அவர்கள் சார்ந்த நிறுவனத்திற்கு ஒரு அவப்பெயரென்றால் மாய்ந்து மாய்ந்து BRAND-ஐ காப்பாற்ற முயல்வார்கள்.போட்டி உலகத்தில் நிலைத்திருப்பது சாதாரண விசயமல்ல. இல்லையென்றால் சந்தையில் விலைபோக முடியாது. கட்சி ,இயக்கம் ,அமைப்பு என்று ஏதேனும் எதிர்பார்த்து ஆரம்பிக்கும்போது BRAND-ஐ கட்டமைப்பது மிக முக்கியமானது. ஆனால்,தனிநபரை பொறுத்த...

ஒரு பெண்ணின் இறப்பில் கூட சாதிய தேடி, வன்மத்தை காட்டும் மலம் தின்னும் மனசாட்சி இல்லாத மனித கொரங்குங்களா??

ஒரு பெண்ணின் இறப்பில் கூட சாதிய தேடி, வன்மத்தை காட்டும் மலம் தின்னும் மனசாட்சி இல்லாத மனித கொரங்குங்களா?? இன்ன வரையும் மாநில பாடத்திட்டத்தில் படிச்சி மருத்துவர் ஆனவங்களாம் வெத்து வெட்டுன்னு சொல்லுறிங்களா?? NEET தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றால்த்தான் சிறந்த மருத்துவர் வருவாங்கனு சொல்லுறிங்களா??? . (Tamil Nadu had 2nd the highest number of registered doctors at 102,328 closely followed by Maharashtra at 148,575 and Tamilnadu have 45 meical colleges followed by Karnataka(50) ,Maharashtra(48)- ). இப்ப 11th நடத்தாம, 12th நடத்தி பொது தேர்வுக்கு தயார் படுத்தும் தனியார் வியாபார கல்வி நிறுவனங்கள் நீட் வந்தால் 11th நடத்த ஆரம்பித்து விடுவார்கள் என்று யோசித்தால் அது முட்டாள் தனமே!!! தனியார் பள்ளிகள் இனி 11th'um நடத்தாது 12th'um நடத்தாது. 11th'il இருந்தே மருத்துவராக விரும்பும் மாணவர்களை தயார் செய்ய ஆரம்பித்து விடும். அதும் இல்லாமல் இப்பவே பல பள்ளிகள் 13th ஆரம்பித்து விட்டார்கள்!! அது என்ன 13th ??அதாவது நீட் தேர்வுக்கு என 1 வருட சிறப்பு பயிற்சி அளிக்கப்போகிறார்கள்.(example:velamma...

"நான் சாதியற்றவன்"

பீக்காட்டில் மூக்கு பிடிக்கும் ஊர்காரா?? உன் ஊர்க்காட்டில் இருக்கும் சாதி வெறி நாத்தத்துக்கு என்ன செய்ய போகிறாய்?? கடைசி வர மூக்க பிடித்துக்கொண்டே சாகப்போகிறாயா ?? ஊர்க்காட்டின் நாத்தத்தை பாத்து எள்ளிநகையாடும் சேரிகார?? சேரிக்காட்டில் இருக்கும் சொச்சம் நாத்தத்தையும் துடைத்து விட்டு பெருமைகொள்!! "நான் சாதியற்றவன்" என்று!!

Masculine vs feminine

Image
ஆண்கள் அனைவரும் ஆண்பாலுக்கு (Masculine) உரிய குணங்களாக சொல்ல கூடிய குணங்களுடன் இருப்பதே சிறப்பு எனவும்,பெண்களெல்லாம் பெண்பாலுக்கு (feminine) உரிய குணங்களாக சொல்ல கூடிய குணங்களுடன் இருப்பதே சிறப்பு எனவும் சொல்ல படுகிறது . இந்த வரையறையை மீறுபவர்கள் இந்த சமூகத்தால் மாற்றுக்கண் கொண்டு பார்க்கப்பட்டு கேலிக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் . அணைத்து குணநலன்களும் இருபாலுக்கு பொதுவில் வைக்க வேண்டும். இதை உணர்ந்தால்தான் பாலின சமத்துவத்தை முன்னெடுக்க முடியும் . # தமிழரசன்_இராணி

மிக பெரிய சமூக ஆபத்து

சாதி ஒழிப்பு கருத்தியலை உள்வாங்க கூட இங்கு பலரால் எளிதாக முடிகிறது. ஆனால், பெண்ணிய கருத்தியலை உள்வாங்க இங்கு பலர் தயங்குகின்றனர். மேலும் பெண்களுக்கே இந்த கருத்தியலை உள்வாங்க துணிவு வருவதில்லை. ஆக இது மிக பெரிய சமூக ஆபத்து. எனவே, சாதி ஒழிப்பையே பெண்ணிய கருத்தியலில் இருந்துதான் தொடங்க வேண்டும். இல்லையென்றால் சாதியே ஒழிந்தாலும் பெண்ணடிமைத்தனம் ஒழியாது. # தமிழரசன்_இராணி

After marriage பொண்ணுங்க last name, change ஆகுற மாறி. பசங்க last name change ஆகுறது இல்லையே!!! ஏன் ???

Image
இந்த meme-la சொல்லுறது சரிதான். மறுப்பதற்கில்லை. ஆனா எனக்கு ஒரு doubt. After marriage பொண்ணுங்க last name, change ஆகுற மாறி. பசங்க last name change ஆகுறது இல்லையே!!! ஏன் ??? இன்னம் விரிவா சொல்லனும்னா, BEFORE MARRIAGE பொண்ணுங்க ,பசங்க ரெண்டு பேருமே அப்பா பேரதான் last name ah போடுறாங்க. இந்த இடத்துல அம்மாங்குற character ah மறந்துடுறாங்க. சரி ,இது இருக்கட்டும். AFTER MARRIAGE பொண்ணுங்க பரவலாக தன்னோட கணவன் பேர last name ah change பண்ணுறாங்க. ஆனா பசங்க தன்னோட அப்பா பெயரையே continue பண்ணுறாங்க. யாரோட பெயரவேணாலும் போட்டுக்கலாம் .அது தனிப்பட்ட விருப்பம் தான் .என்னோட கேள்வி ?? அப்பா, கணவன் போன்ற ஆண் characters கொடுக்குற முக்கியத்துவம். அம்மா, மனைவி போன்ற பெண் characters-ku கொடுக்குறது இல்லையேன்னுதான் கேக்குறேன் .பொண்ணுங்க........அப்பா, கணவன் போன்ற ஆண்கள் பெயரை last name ah போடுற மாறி, ஏன் பசங்க........அம்மா, மனைவி போன்ற பெண்கள் பெயரை last name ah போட கூடாது .

பெற்றோரிடமிருந்து கணவனை வலுக்கட்டாயமாக பிரிக்கும் மனைவியை விவாகரத்து செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு: இது சரியா??? எனது பார்வையில்,

Image
தமிழரசன் இராணி October 14, 2016 at 7:52am · பெற்றோரிடமிருந்து கணவனை வலுக்கட்டாயமாக பிரிக்கும் மனைவியை விவாகரத்து செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு: இது சரியா??? எனது பார்வையில், இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் ஏராளமான ஆதரவுகள்.தவறுதான் மக்களே….. பெற்றோரிடம் இருந்து மகனை பிரிப்பது .இதனால் கணவனின் பெற்றோர் வயதான காலதில் கவனிக்க நாதி இல்லாது தவிப்பார்.எல்லாம் சரிதான் பா.இங்கே பல நூற்றாண்டு காலமாக பெண் தன் பெற்றோரை விட்டு கணவன் வீட்டில் வாழும் வழக்கம் உள்ளது.இந்தியாவில் 99% திருமணம் இப்படிதான் நடக்கிறது . ஆண் மகன் இல்லாமல் ,பெண் மகளை மட்டுமே பெற்ற பெற்றோரது இறுதி காலம்,அவர்கள் படும் இன்னல்கள் ,கவனிபாரற்ற நிலைய பற்றி யாராவது யோசித்தார்களா? ,அதற்கு இந்திய அரசியல்லமைப்பு சட்டதில் வழி இருக்குறதா? இதற்கு தீர்வுதான் என்ன ? பெண்ணை பெற்றதை தவிர வேறென்ன தவறு செய்தனர்.இதை பற்றி யாருமே பேசுவதில்லை என்பது மிக பெரிய கொடுமை . இது மிக கொடிய பெண் சிசு கொலைக்கு காரணாகிறது.ஆண்தான் கடைசி வரைக்கும் சோறு போடுவானாம்.(2011 censes gender ratio per 1000 male ,hariy...

இன்று உலக பெண் குழந்தை தினம்

Image
இன்று உலக பெண் குழந்தை தினம் , 21 ஆம் நூற்றாண்டில் வாழும் நம்மிடையே இன்னும் பாலின பாகுபாடு (gender stereotypes) வேரூண்டிஉள்ளது . பெண் பிறபதில்லை ,மாறாக உருவாக்கபடுகிறாள்,என்றார் பிரபல பெண்ணியவாதி சிமோன் டி.ஆம் இதை நாம் குழந்தை பிறந்ததிலருந்தே தவறாமல் செய்கிறோம். .ஆண் குழந்தைக்கு கார் ,டைனோசர் போன்ற பொம்மைகளை தருவதிலும்,பெண் குழந்தைக்கு மரபாச்சி,பார்பி போன்ற மென்மையான பொம்மைகளை வாங்கி தருவதி ல் ஆரம்பிக்குறது இந்த பிரச்சனை. பெண் குழந்தை சமைபதற்கும்,துவைபதற்கும் ,கோலம் போடுவதற்கும் ஊக்குவிக்கபடுகிறாள்.வீட்டு வேலைகளை செய்ய ஒரு இனதையே அடிமை படுத்துவதா?? என்ன கொடுமைஎன்றாள் பெண் இதை செய்வதுற்கு சின்ன பாராட்டு கூட கிடைபதில்லை.. பெண்ணால் எல்லாம் முடியும் என்பதை கல்பனா சாவ்லா ,மூரி கோம் ,சானியாமிர்சா ,சாய்னா என பலர் செய்து காட்டி உள்ளனர்.ஊடகங்களில் காட்டுவது போல பெண்கள் அலங்கார பொம்மைகள் அல்ல.ஆண்கள் விரும்பும் பெண்ணாக இல்லாமல் நீங்கள் விரும்பும் பெண்ணாக இருங்கள் . உங்கள் பெண் குழந்தை ஆண் தான் வலிமையானவன் என்னால் இதை தூக்க முடியாது என சொன்னால் ..நீயும் வலிமையானவள் உன்னாலும...