Posts

Showing posts from July, 2018

இந்தியாவில் தினமும் 106 பேர் பாலியல் வன்க்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்

இந்தியாவில் தினமும் 106 பேர் பாலியல் வன்க்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதில் 10 இல் 4 பேர் குழந்தைகள் என்கிறது   NCRB ( National Crime Records Bureau - 2016) ஆய்வு அறிக்கை . மேலும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவலாக , பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றம் புரிந்தோரில் 94.6 % குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர்கள்,நண்பர்கள் என்பதுதான்                (http://ncrb.gov.in/StatPublications/CII/CII2016/pdfs/Crime%20Statistics%20-%202016.pdf ) மேலும்  உலகளவில் 16% பாலியல் வன்க்கொடுமைகள் மட்டுமே புகார் கொடுக்கப்பட்டு வழக்குகளாகப் பதிவுசெய்யப்படுகிறது என்கிறது ஓர் ஆய்வுக் கட்டுரை (https://www.ncjrs.gov/app/publications/abstract.aspx?ID=240972) குற்றவாளிகளை தண்டித்துவிட்டால் இந்த கொடுமைகள் நின்றுவிடுமா ??? இத்தகைய குற்றங்கள் நடைபெறுவதற்கான அடிப்படை காரணங்கள் என்ன ??? பெண் என்றால் வெறும்  இன்பம் தரும் ஓர் சதை பிண்டம் என்ற புரிதலா ??? ஆண்களின் பாலியல் தேவையை பூர்த்தி செய்யவே பெண் என்ற புரிதலா ??? அவளும்...