Posts

இந்தியாவில் தினமும் 106 பேர் பாலியல் வன்க்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்

இந்தியாவில் தினமும் 106 பேர் பாலியல் வன்க்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதில் 10 இல் 4 பேர் குழந்தைகள் என்கிறது   NCRB ( National Crime Records Bureau - 2016) ஆய்வு அறிக்கை . மேலும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவலாக , பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றம் புரிந்தோரில் 94.6 % குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர்கள்,நண்பர்கள் என்பதுதான்                (http://ncrb.gov.in/StatPublications/CII/CII2016/pdfs/Crime%20Statistics%20-%202016.pdf ) மேலும்  உலகளவில் 16% பாலியல் வன்க்கொடுமைகள் மட்டுமே புகார் கொடுக்கப்பட்டு வழக்குகளாகப் பதிவுசெய்யப்படுகிறது என்கிறது ஓர் ஆய்வுக் கட்டுரை (https://www.ncjrs.gov/app/publications/abstract.aspx?ID=240972) குற்றவாளிகளை தண்டித்துவிட்டால் இந்த கொடுமைகள் நின்றுவிடுமா ??? இத்தகைய குற்றங்கள் நடைபெறுவதற்கான அடிப்படை காரணங்கள் என்ன ??? பெண் என்றால் வெறும்  இன்பம் தரும் ஓர் சதை பிண்டம் என்ற புரிதலா ??? ஆண்களின் பாலியல் தேவையை பூர்த்தி செய்யவே பெண் என்ற புரிதலா ??? அவளும்...

#lakshmi_shortfilm #need_genderstudies #educate_girl

#lakshmi_shortfilm #need_genderstudies #educate_girl            இந்த படம் பெண்ணியம் பேசிவிட்டதாக சொல்கிறார்கள் . இல்லை , இது கலாச்சார சீரழிவு என்கிறார்கள்   நிச்சியமாக இல்லை . இங்கு யதார்த்தத்தில்   பெண்ணுரிமைகள் என்னவென்றே தெரியாத சமூக அவலநிலையில்தான் பெரும்பாலான பெண்கள் உள்ளனர் .              லட்சுமி புரட்சி பேசவில்லை . தன்வலியை உணர சொல்கிறாள் . அவள் இந்த சமூகத்திற்கு பல கேள்விகளை விட்டுச்சென்றுள்ளாள் . வீட்டு வேலைக்காகவும் , உடலியல் சுகத்திற்காகவும் அடிமையாக நடத்தப்படும் பெண்களின் எதார்த்த வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறாள் . இந்த அடிமை எதார்த்த வாழ்க்கையிலிருந்து முழுமையாக பெண்கள் விடுதலை வேண்டிய தேவையை அவள் உணர்த்திருக்கிறாள் .                 " # என்னதான் இருந்தாலும் லட்சுமி செய்தது சரியா ?? " என்று கேட்கிறார்கள் அவர்களுக...

BRAND MANAGEMENT

எந்தவொரு ஒரு மதமானாலும், எந்தவொரு ஒரு இயக்கமானாலும்,எந்தவொரு ஒரு கட்சியானாலும்,எந்தவொரு தனிநபரானாலும் அவர்களுடைய BRAND VALUE என்பது மிக அவசியமானது .இப்படி ஒவ்வொன்றையும் ஒரு நிறுவனத்தைப்போல தொடர்புப்படுத்தி பார்ப்போமேயானால், நாம் எளிதாக இதன் செயல்பாடுகளை புரிந்துக்கொள்ள முடியும். நோக்கம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர்களின் BRAND VALUE குறையாமல் பார்த்துக்கொள்ள அவர்கள் MARKETING செய்தே ஆக வேண்டும். இல்லையென்றால், அவர்கள் போட்டியில் நிலைக்க முடியாது. அவர்களுக்கான முக்கியத்துவம் குறைந்துவிடும்.அந்த இடத்தில வருவதற்கு பலர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.(SOME BRANDS:DMK,ADMK,SUPER STAR,ULAGANAYAGAN) . ஒவ்வொருவரும் அவர்கள் சார்ந்த நிறுவனத்திற்கு ஒரு அவப்பெயரென்றால் மாய்ந்து மாய்ந்து BRAND-ஐ காப்பாற்ற முயல்வார்கள்.போட்டி உலகத்தில் நிலைத்திருப்பது சாதாரண விசயமல்ல. இல்லையென்றால் சந்தையில் விலைபோக முடியாது. கட்சி ,இயக்கம் ,அமைப்பு என்று ஏதேனும் எதிர்பார்த்து ஆரம்பிக்கும்போது BRAND-ஐ கட்டமைப்பது மிக முக்கியமானது. ஆனால்,தனிநபரை பொறுத்த...

ஒரு பெண்ணின் இறப்பில் கூட சாதிய தேடி, வன்மத்தை காட்டும் மலம் தின்னும் மனசாட்சி இல்லாத மனித கொரங்குங்களா??

ஒரு பெண்ணின் இறப்பில் கூட சாதிய தேடி, வன்மத்தை காட்டும் மலம் தின்னும் மனசாட்சி இல்லாத மனித கொரங்குங்களா?? இன்ன வரையும் மாநில பாடத்திட்டத்தில் படிச்சி மருத்துவர் ஆனவங்களாம் வெத்து வெட்டுன்னு சொல்லுறிங்களா?? NEET தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றால்த்தான் சிறந்த மருத்துவர் வருவாங்கனு சொல்லுறிங்களா??? . (Tamil Nadu had 2nd the highest number of registered doctors at 102,328 closely followed by Maharashtra at 148,575 and Tamilnadu have 45 meical colleges followed by Karnataka(50) ,Maharashtra(48)- ). இப்ப 11th நடத்தாம, 12th நடத்தி பொது தேர்வுக்கு தயார் படுத்தும் தனியார் வியாபார கல்வி நிறுவனங்கள் நீட் வந்தால் 11th நடத்த ஆரம்பித்து விடுவார்கள் என்று யோசித்தால் அது முட்டாள் தனமே!!! தனியார் பள்ளிகள் இனி 11th'um நடத்தாது 12th'um நடத்தாது. 11th'il இருந்தே மருத்துவராக விரும்பும் மாணவர்களை தயார் செய்ய ஆரம்பித்து விடும். அதும் இல்லாமல் இப்பவே பல பள்ளிகள் 13th ஆரம்பித்து விட்டார்கள்!! அது என்ன 13th ??அதாவது நீட் தேர்வுக்கு என 1 வருட சிறப்பு பயிற்சி அளிக்கப்போகிறார்கள்.(example:velamma...

"நான் சாதியற்றவன்"

பீக்காட்டில் மூக்கு பிடிக்கும் ஊர்காரா?? உன் ஊர்க்காட்டில் இருக்கும் சாதி வெறி நாத்தத்துக்கு என்ன செய்ய போகிறாய்?? கடைசி வர மூக்க பிடித்துக்கொண்டே சாகப்போகிறாயா ?? ஊர்க்காட்டின் நாத்தத்தை பாத்து எள்ளிநகையாடும் சேரிகார?? சேரிக்காட்டில் இருக்கும் சொச்சம் நாத்தத்தையும் துடைத்து விட்டு பெருமைகொள்!! "நான் சாதியற்றவன்" என்று!!

Masculine vs feminine

Image
ஆண்கள் அனைவரும் ஆண்பாலுக்கு (Masculine) உரிய குணங்களாக சொல்ல கூடிய குணங்களுடன் இருப்பதே சிறப்பு எனவும்,பெண்களெல்லாம் பெண்பாலுக்கு (feminine) உரிய குணங்களாக சொல்ல கூடிய குணங்களுடன் இருப்பதே சிறப்பு எனவும் சொல்ல படுகிறது . இந்த வரையறையை மீறுபவர்கள் இந்த சமூகத்தால் மாற்றுக்கண் கொண்டு பார்க்கப்பட்டு கேலிக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் . அணைத்து குணநலன்களும் இருபாலுக்கு பொதுவில் வைக்க வேண்டும். இதை உணர்ந்தால்தான் பாலின சமத்துவத்தை முன்னெடுக்க முடியும் . # தமிழரசன்_இராணி

மிக பெரிய சமூக ஆபத்து

சாதி ஒழிப்பு கருத்தியலை உள்வாங்க கூட இங்கு பலரால் எளிதாக முடிகிறது. ஆனால், பெண்ணிய கருத்தியலை உள்வாங்க இங்கு பலர் தயங்குகின்றனர். மேலும் பெண்களுக்கே இந்த கருத்தியலை உள்வாங்க துணிவு வருவதில்லை. ஆக இது மிக பெரிய சமூக ஆபத்து. எனவே, சாதி ஒழிப்பையே பெண்ணிய கருத்தியலில் இருந்துதான் தொடங்க வேண்டும். இல்லையென்றால் சாதியே ஒழிந்தாலும் பெண்ணடிமைத்தனம் ஒழியாது. # தமிழரசன்_இராணி