இந்தியாவில் தினமும் 106 பேர் பாலியல் வன்க்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்
இந்தியாவில் தினமும் 106 பேர் பாலியல் வன்க்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதில் 10 இல் 4 பேர் குழந்தைகள் என்கிறது NCRB ( National Crime Records Bureau - 2016) ஆய்வு அறிக்கை . மேலும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவலாக , பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றம் புரிந்தோரில் 94.6 % குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர்கள்,நண்பர்கள் என்பதுதான் (http://ncrb.gov.in/StatPublications/CII/CII2016/pdfs/Crime%20Statistics%20-%202016.pdf ) மேலும் உலகளவில் 16% பாலியல் வன்க்கொடுமைகள் மட்டுமே புகார் கொடுக்கப்பட்டு வழக்குகளாகப் பதிவுசெய்யப்படுகிறது என்கிறது ஓர் ஆய்வுக் கட்டுரை (https://www.ncjrs.gov/app/publications/abstract.aspx?ID=240972)
குற்றவாளிகளை தண்டித்துவிட்டால் இந்த கொடுமைகள் நின்றுவிடுமா ??? இத்தகைய குற்றங்கள் நடைபெறுவதற்கான அடிப்படை காரணங்கள் என்ன ??? பெண் என்றால் வெறும் இன்பம் தரும் ஓர் சதை பிண்டம் என்ற புரிதலா ??? ஆண்களின் பாலியல் தேவையை பூர்த்தி செய்யவே பெண் என்ற புரிதலா ??? அவளும் தம்மை போன்ற சம மனிஷி என்ற புரிதல் இல்லாதது ஏன் ?? நாம் எதிர் பாலின புரிதலை எங்கெல்லாம் கற்றுள்ளோம் ?? பொம்பள புள்ள அடக்கமா இருக்கனும், சாண் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை போன்ற இயல்பான பிற்போக்கு பழமொழிகள் பேசும் சமூகம், பெண்களை கவர்ச்சிகாகவும் , காதலிப்பதற்காக பயன்படுத்தும் நமக்கு நெருங்கிய சினிமாக்கள் , காட்சி ஊடகங்கள் இவைதான் நமக்கு எதிர்பாலின புரிதலை ஏற்படுத்துக்கின்றன.
உண்மையில் நமக்கு எதிர் பாலின புரிதலை உருவாக்குவது கல்வி சாலைகளாகதான் இருக்க வேண்டும் . பாலியல் கல்வி பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் . பெற்றோர்கள் பிள்ளை வளர்ப்பில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் . Good touch , bad touch புரிதலை சிறு வயதிலே கற்றத்தர வேண்டும் . குழந்தைகளிடம் தினமும் கண்டிபாக மனம் விட்டு நண்பரை போலவே பழக வேண்டும் . கண்டிப்பு என்ற பெயரில் குழந்தைகளை அடிப்பதும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் .எத்தனை காலம்தான் பெண் குழந்தைகளை பாதுகாப்பதே பெற்றோருடைய பணியாகவே இருக்க வேண்டும். பாலின சமத்துவத்தை ஆண்களுக்கு எப்போது கற்றுத்தர போகிறோம். பெண்களிடமே இருக்கின்ற அடிமை சிந்தனையும் ஒழிப்பதே பாலின சமத்துவத்தின் முதல் படி . மேலும் சமைத்தல்,துவைத்தல்,குழந்தை வளர்ப்பு போன்ற அனைத்துமே அனைத்துபாலர்க்கும் பொதுவானவை என்ற சிந்தனை வளர வேண்டும்.
நமது தலைமுறையிலாவது பாலினப் புரிதலை குழந்தைகளுக்கு ஏற்படுத்தி பாலின சமுத்துவ சமுதாயம் படைக்க முயல்வோம்.
~தமிழரசன் இராணி

Comments
Post a Comment