Posts

Showing posts from August, 2017

பெரியார் எதிர்ப்பு ஏன் ??

பெரியார் எதிர்ப்பு ஏன் ??              பெரியார் இறந்து 44 வருடங்கள் ஆனாலும் அவரை பற்றிய எதிர்ப்பு பிரச்சாரம் அரங்கேறிக்கொண்டேவருகிறது  .ஆம், பெரியாருக்கு எதிர்ப்பு இல்லையென்றால் தான் ஆச்சிரியப்படவேண்டும்.பெரியார் சுயமரியாதை இயக்கம் எதிர்ப்பில்தான் ஆரம்பித்தார் .அவர் சென்ற இடமெல்லாம் எதிர்ப்புதான் .அவர் பேசிய வார்த்தைக்கெல்லாம் எதிப்புதான். அவரின் வாழ்க்கை எதிர்ப்பில் தொடர்ந்தது. இந்த எதிர்ப்பு  பிரச்சாரம் பெரியாரை பலருக்கு அறிமுகப்படுத்திருக்கும். யாருடா இந்த தாடி கிழவன் என்று அவரை பத்தி  படிக்க ஆரம்பித்து பெரியாரை புரிந்துகொண்டவர்கள் பலர் .பெரியாரை எதிர்ப்பவர்கள் வெறும் கற்பனை கதைகளை புனைந்து பேசுவது அவரை படித்தவர்களுக்கு  புரியும் .பெரியாரின் கூற்றை நேரிடைய எதிர்க்க திராணி இல்லாதவர்களே இப்படி கற்பனை கதைகளை புனைந்து பேசி மொக்கை வாங்கி கொள்வார்கள்  .இறுதி மூச்சு அடங்கும் வரை மூத்திர சட்டியுடன்  பெரியார் மக்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டே இருந்தார். அவர் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள், 3 மாதங்கள், 7...

திராவிடம் வேறு,ஓட்டு அரசியல் வேறு

"இனத்தால் திராவிடன் மொழியால் தமிழன்" என்பது "இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன்" என்று மாறிருக்கிறது. இதுதான் திராவிட கருத்தியலின் சிறப்பு .எப்போதும் திராவிடத்தை ஒரு இனமாக பார்க்காமல் மனிதம் கேட்கும் மாமருந்தாகவே பார்க்கவேண்டும் .இனமாக எங்கு பயன்படும், கருத்தியலாக எங்கு பயன்படணும் என்று திராவிடத்திற்கு தெரியும் .மதமாக இருந்தாலும் ,இயக்கமாக இருந்தாலும் காலத்திற்கு ஏற்ற மாற்றம் செய்யாவிடில்  அது அழிந்து போகும். இதை பெரியாரும், திராவிட இயக்கமும் நன்கு உணர்ந்தவர்கள் .மதங்களை மாற்றம் செய்ய முடியாது என்பதால் அது அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உலகத்தில் மத மறுப்பாளர்களின் எண்ணிக்கை  வேகமாக வளர்ந்து வருவதை காட்டும் பல ஆய்வு முடிவுகளே அதற்கு சான்று.  திராவிடம் என்பது மனித இழிவு நீங்க சமத்துவத்தை முன்னெடுத்து அதை செயல் படுத்த போராடிக்கொண்டிருக்கும் சொல் .திராவிடத்தை அரசியல் மூலம் செயல்படுத்த எண்ணி முயற்சி செய்தவர்கள் ஓட்டு அரசியலில் சிக்குண்டு தவிக்கிறார்கள்.அடிக்கடி அவர்களுக்கு அதை நியாபகப்படுத்த வேண்டிருக்கிறது .அவர்கள் சமூக நீதியில்  போதுமான வெற்...

தமிழர் பண்பாடு, கலாச்சாரம்

தமிழர் பண்பாடு, கலாச்சாரம் என்ற பதம் அடிக்கடி நமது இயல்பான வாழ்க்கையில் மூக்கை நுழைத்து குழப்பத்தை  ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது.நாம்  கலாச்சார வரையறையில் இருந்து சற்று விலகினாலும்  "தமிழ் கலாச்சாரம் காற்றில் பறக்கிறது பாருங்கள்" என்று புலம்புகிறார்கள்  . உண்மையில் அப்படி ஒரு வரையறை இருக்கிறதா ?? பண்பாடு, கலாச்சாரம் என்பது காலஓட்டத்தில் மாறிக்கொண்டே இருக்கும்.அணைத்து பழக்க வழக்கங்களும் பரிணாம மாற்றம் அடைந்து வருவதை மறுக்கமுடியாது . இத்தனை வருட மாற்றத்தில் எதை தமிழ் பண்பாடு, கலாச்சாரம் என்று கூற வருகிறீர்கள் .நீங்கள் கூறும்  வரையறை படி நம் முன்னோர்கள் வாழ்ந்தார்களா என்றால் பதில் இல்லை. உதாரணமாக பலதார மனமுறை சாதாரணமாக நடந்துள்ளது. "ஆம்பள எத்தனை பேரு  கூடவேன போவான்" என்ற சொல்லலாடல் பெண்களிடமிருந்தே வந்துள்ளது .நமது தாத்தா பாட்டி கூட பிறந்தவர்கள் எத்தனை பேரு என்று கேப்போமேயானால் பெரும்பாலும் 5-க்கு குறையாமல் பதில் வரும். 5-க்கு மேற்பட்ட குழந்தையை பெற்றத ஆண் மகனின் வீரமாக பாக்கப்பட்டதும் ,இதுவே ஆண் குழந்தையாக இருந்தால் மீசையை முறுக்கி கொண்டு "சிங்க குட்டி" பொ...

கற்பழிப்பா? பாலியல் வன்கொடுமையா?

கற்பழிப்பா? பாலியல் வன்கொடுமையா? தினசரி நாளிதழ்களில்  தொலைக்காட்சி செய்திகளில் தினமும் பெண் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதை பெண் கற்பழிப்பு என்றே பெருபாலும் செய்தியை வெளியிடுகின்றனர். கற்பு அழிந்துவிட்டதா? கற்பு என்ற வார்த்தைக்கு ஏன் இந்த புனித தன்மை? கற்பு என்பது பெண்ணிற்கு மட்டும் உரித்தானது ஏன் ?அதும் பெண்ணின் பிறப்புறுப்பிலே ஒளித்துவைத்தது ஏன்? வேற்வொருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும்  பெண் எதற்காக  கற்பை இழந்தால் என்று சொல்லி இந்த சமுதாயம் அவளை தனிமைப்படுத்துவது ஏன்?   நம் அறிவாளி  முன்னோர்கள் குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கி, கற்பு என்ற வார்த்தையை பெண்ணிற்கு உரியதாக திணித்து, அவளை ஒரு பொருளாக கருதி, வீட்டுக்குள்ளே பாதுகாப்பு என்ற பெயரில் சிறை படுத்தினார்கள். பெண் வாசல்படி தாண்டுவதை பெரும்குற்றமாக கருதினார்கள் . சாதி என்ற அமைப்பு உடையாமல், குடும்பம் என்ற அமைப்பை சிதையாமல் பார்த்துக்கொண்டார்கள்.பெண்ணிற்கு கற்பு என்ற பதம் உண்டென்றால் ஆணுக்கு கற்பு என்ற பதம் இல்லாதது ஏன்? கற்பிற்கு ஒழுக்கம் என்று பொருள் என்று நீங்கள் சமாளித்தால் ஆணுக்கு ஒழுக்கம் தேவை...

சமஉடைமையும், சமஉரிமையும் :

சமஉடைமையும், சமஉரிமையும் : பொது கிணற்றில் நீர் எடுக்க ஒடுக்கப்பட்டவர்களுக்குக்கு உரிமை மறுக்கப்பட்டபோது அவர்களுக்கென்று தனியாக கிணறு தோண்டி கொடுப்பது சமஉடைமை. பொது கிணற்றிலே நீர் எடுக்கும் உரிமையை மீட்டு கொடுப்பது சமஉரிமை  .சமஉடைமையை விட சமஉரிமையே சரியான தீர்வு     

சீமை கருவேலமரத்தில் முதலாளித்துவ சார்பு அரசியல்

சீமை கருவேலமரத்தில் முதலாளித்துவ சார்பு  அரசியல்: அன்று  இலவச எரிவாயு இணைப்பை கொடுத்து எரிவாயு சிலிண்டெர்க்கு மானியம் கொடுத்து ,கொடுத்து பெரும்பாலான மக்களை எரிவாயு சமையல் முறைக்கு மாற்ற முயற்சி செய்துகொண்டிருந்த, அதேவேளையில் சீமை கருவேலமரம் எதிர்ப்பு பிரச்சாரம் பரவிவிடப்பட்டது . மேலும் மக்கள் உபயோகப்படுத்தப்படாமல் இருக்க, கருவேலமரத்தை வெட்ட தடை விதிக்கப்பட்டிருந்தது .கருவேலமரம் மிக சிறந்த எரித்திரனுடைய பொருள் இதன் சிறப்பு அம்சமென்னவென்றால் இது பச்சயாக இருக்கும் போது கூட சிறப்பாக எரியும். மழைக்காலத்திலும் பிரச்சனை இல்லை .இதில் அதிகளவு கார்பனும், லிக்ணைனும் உள்ளதே காரணம்  .இதன் திறன் 20% ஆக இருக்கும் போதே சமையலை சிறப்பாக முடித்தது வளிமயமாக்கல் (gasification) மூலமாக இதன் திறனை 50-ஆகா உயர்த்தினாலே LPG- க்கு  இணையான ஆற்றலை பெற முடியும் .இதனால் சுற்று சூழல் பாதிப்பும் குறைவு .நாம் என்ன செய்திருக்க வேண்டும். இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கருவேலமரத்தின் திறனை வளிமயமாக்கல் (gasification) மூலமாக எப்படி முழுமையா செயற்படுத்த முடியும் என்றுதானே சிந்திக்க வேண்டும் .அதற்கான ...

இடஒதுக்கீடு

தாழ்த்தப்பட்ட மற்றும்  பிற்படுத்தப்பட்ட   சமுதாயமே ,  உங்களுக்கு கிடைத்திருக்கும் இடஒதுக்கீடு என்பது சலுகையல்ல அது உங்கள் அடிப்படை உரிமை .இந்த உரிமை முழுமையாக பயன்படுத்த படுகிறதா என்பது கேள்விக்குறியாக்கி பார்ப்போமேயானால் பதில் இல்லை என்றே வருகிறது .  உதாரணமாக திருச்சி அரசு பொறியியல்(UNIVERSITY COLLEGE OF ENGINEERING, TIRUCHIRAPPALLI) இயந்திரவியல் பிரிவிற்கு சென்ற வருட கலந்தாய்வு முடிவின் படி அமைந்த குறைந்தபட்ச cut off mark விவரங்கள் ஏறுவரிசைப்படி    ST(138)<SCA(176.25)<SC(177.25)<BCM(178.75)<MBC(184.5)<BC(186.25)<OC(189.25)  (source: http://cutoff.tnea.ac.in/ ) என்று இருக்கிறது .இந்த வருடம் கலந்தாய்வு முடிவில் சிறுமாறுதல்கள் ஏற்படலாம். பின்தங்கிய சமூகங்கள் இடஒதுக்கீட்டை முழுமையாக பயன்படுத்தவில்லை என்பதை minimum cut off mark  வேறுபடுகளே வெளிப்படையாக காட்டுகிறது   .ஏன் OC-விட BC-க்கு குறைவாக இருக்கிறது?? ஏன் MBC-க்கு அதைவிட குறைவாக இருக்கிறது.மேலும் SC/ST-க்கு மிக  குறைவாக வந்துருக்கு என்று யாராவது சிந்...