இடஒதுக்கீடு


தாழ்த்தப்பட்ட மற்றும்  பிற்படுத்தப்பட்ட   சமுதாயமே ,  உங்களுக்கு கிடைத்திருக்கும் இடஒதுக்கீடு என்பது சலுகையல்ல அது உங்கள் அடிப்படை உரிமை .இந்த உரிமை முழுமையாக பயன்படுத்த படுகிறதா என்பது கேள்விக்குறியாக்கி பார்ப்போமேயானால் பதில் இல்லை என்றே வருகிறது .  உதாரணமாக திருச்சி அரசு பொறியியல்(UNIVERSITY COLLEGE OF ENGINEERING, TIRUCHIRAPPALLI) இயந்திரவியல் பிரிவிற்கு சென்ற வருட கலந்தாய்வு முடிவின் படி அமைந்த குறைந்தபட்ச cut off mark விவரங்கள் ஏறுவரிசைப்படி    ST(138)<SCA(176.25)<SC(177.25)<BCM(178.75)<MBC(184.5)<BC(186.25)<OC(189.25)  (source: http://cutoff.tnea.ac.in/ ) என்று இருக்கிறது .இந்த வருடம் கலந்தாய்வு முடிவில் சிறுமாறுதல்கள் ஏற்படலாம். பின்தங்கிய சமூகங்கள் இடஒதுக்கீட்டை முழுமையாக பயன்படுத்தவில்லை என்பதை minimum cut off mark  வேறுபடுகளே வெளிப்படையாக காட்டுகிறது   .ஏன் OC-விட BC-க்கு குறைவாக இருக்கிறது?? ஏன் MBC-க்கு அதைவிட குறைவாக இருக்கிறது.மேலும் SC/ST-க்கு மிக  குறைவாக வந்துருக்கு என்று யாராவது சிந்தித்தது உண்டா??? .இந்த அளவீடு அரசால் முடிவு செய்யப்படவில்லையே இதற்கு அந்த அந்த சமுதாய மக்களே பொறுப்பு .என்னை விட மதிப்பெண் குறைவாக அடுத்தவனுக்கு இடம் கிடைத்துவிட்டதே என்ற சுயநலவாத பொறாமைத்தனமே நம்மிடம் எழுகிறது.அவர்களில் பலர் போட்டிக்கே வருவதில்லையே  அதனால்தான் cut off குறைவாக வந்துருக்கிறது என்று யாராவது பொதுநலத்தோடு வருந்தியதுண்டா  ஆனால் காமராஜர் ஆட்சி மாறி வேண்டும் என்று பேச மட்டும் தெரியும் . அவர்களிடையே போட்டிகள் குறைவாக இருப்பதே அவர்களின் cut off குறைவாக அமைவதற்கு காரணமாகிறது. இன்னம் தெளிவாக சொல்லவேண்டுமானால் அவர்களில் பல பேர் போட்டிக்கே வருவதில்லை அதாவது படிக்கவே வருவதில்லை .இடஒதுக்கீட்டை பயன்படுத்தி முன்னேறியவர்கெல்லாம் சுயநலத்துடனே செயல்படுகின்றனர். உங்களை பார்த்து கேக்குறேன் இடஒதுக்கீடு உங்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டதா? இல்லை உங்கள் சமுதாயத்திற்கு கொடுக்கப்பட்டதா? .நீங்கள் படித்து முன்னேறிவிட்டால் போதுமா? உங்கள் சமுதாயத்திற்கு இன்னம் cut off குறைவாக அமைந்திருப்பதை பற்றி சிந்திக்கமாற்றிர்களா  .எப்பொழுது உங்கள் சமுதாயத்தில் அனைவரும் போட்டி போட வருவார்கள்? .அதற்காக நீங்கள் செய்த முயற்சி என்ன? எத்தனை பேருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினீர்கள்?.அரசு அதன் கடமையை செய்தாகிவிட்டது. அதனிடம் மேலும் எதிர்பார்ப்பதை விட ஒவ்வொருவருமே  தத்தமது கடமையாக எண்ணி முடிந்தளவுக்கு பக்கத்துக்கு வீட்டிலாவது விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் .தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பல பிரிவுகள் இவர்களில் சிலர் ஆண்ட பரம்பரை, சோழ வம்சம் என்று போலி சுயபெருமையோடு சொல்வதோடு சிறு வயதிலே பிள்ளைகள் மனதில் நஞ்சை கலக்கின்றனர் . சில இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படாமல்  சாதி சங்கங்களின் பின்னால் செல்வது வருத்தமளிக்கிறது .நாம் சார்ந்த சாதிக்கும் நமது அறிவுக்கும் ,செயலுக்கும் துளியும் சம்மந்தம் இல்லை என்பதை உணர்த்த வேண்டும் .சாதி பெருமையை உடைத்தெறிந்து நமக்கென்று இந்த சமுதாயத்தில் தனி அடையாளத்தை நமது நற்செயலின் மூலம் உருவாக்குவோம் . சாதி, மதம் ,இனம் கடந்த மனிதநேயம் உணரப்பட்டுவருகிறது   மனிதனின் முன்னேற்றத்திற்கு மனிதமே சிறந்த வினைஊக்கி

Comments

Popular posts from this blog

சமஉடைமையும், சமஉரிமையும் :

மிக பெரிய சமூக ஆபத்து

ஒரு பெண்ணின் இறப்பில் கூட சாதிய தேடி, வன்மத்தை காட்டும் மலம் தின்னும் மனசாட்சி இல்லாத மனித கொரங்குங்களா??