கற்பழிப்பா? பாலியல் வன்கொடுமையா?
கற்பழிப்பா? பாலியல் வன்கொடுமையா? தினசரி நாளிதழ்களில் தொலைக்காட்சி செய்திகளில் தினமும் பெண் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதை பெண் கற்பழிப்பு என்றே பெருபாலும் செய்தியை வெளியிடுகின்றனர். கற்பு அழிந்துவிட்டதா? கற்பு என்ற வார்த்தைக்கு ஏன் இந்த புனித தன்மை? கற்பு என்பது பெண்ணிற்கு மட்டும் உரித்தானது ஏன் ?அதும் பெண்ணின் பிறப்புறுப்பிலே ஒளித்துவைத்தது ஏன்? வேற்வொருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண் எதற்காக கற்பை இழந்தால் என்று சொல்லி இந்த சமுதாயம் அவளை தனிமைப்படுத்துவது ஏன்? நம் அறிவாளி முன்னோர்கள் குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கி, கற்பு என்ற வார்த்தையை பெண்ணிற்கு உரியதாக திணித்து, அவளை ஒரு பொருளாக கருதி, வீட்டுக்குள்ளே பாதுகாப்பு என்ற பெயரில் சிறை படுத்தினார்கள். பெண் வாசல்படி தாண்டுவதை பெரும்குற்றமாக கருதினார்கள் . சாதி என்ற அமைப்பு உடையாமல், குடும்பம் என்ற அமைப்பை சிதையாமல் பார்த்துக்கொண்டார்கள்.பெண்ணிற்கு கற்பு என்ற பதம் உண்டென்றால் ஆணுக்கு கற்பு என்ற பதம் இல்லாதது ஏன்? கற்பிற்கு ஒழுக்கம் என்று பொருள் என்று நீங்கள் சமாளித்தால் ஆணுக்கு ஒழுக்கம் தேவையற்றதா என்றே என்னிடம் பதில் வரும் .இந்த ஆணாதிக்க சமூகம் உருவாக்கிய சாதி அமைப்பை பாதுகாக்க பெண் பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டது இன்றும் தொடர்வதுதான் அவமானமாக உள்ளது. கற்பு என்ற வார்த்தையில் ஒரு பொருள் இருந்ததும் இல்லை. இருக்கப்போவதும் இல்லை .கற்பு என்று கூறி பெண்ணின் மீது புனிதத்தை பூசி, பின் அவள் அதை மீறினால் வசைச்சொல்லுக்கு ஆளாக்குகிறார்கள். கற்பு என்ற பதத்தை பெண்களே ஏற்று கொள்ளும் அளவுக்கு திணித்துவிட்டதுதான் கொடுமையிலும் கொடுமை .ஆணும் பெண்ணும் இறுதிவரை சேர்ந்து வாழவேண்டும் என்றே காதலிக்குகிறார்கள் சேர்ந்து வாழ்கின்றனர் ஏதாவது ஒரு காரணத்தால் கருத்துவேற்றுமையால் பிரிந்தால் அது யாருடைய தவறு ?? பெண்ணின் கற்புநெறி பற்றி கேள்விக்குள்ளாக்குவதேன் .நமது கலாச்சாரம் என்று எதுமே இல்லை எல்லாம் அவ்வப்போது மாறக்கூடியது நமது கலாச்சாரமாக சொல்லப்படுவதை எல்லாம் குப்பையில் போடும் நேரம் இது .கற்பு என்ற வார்த்தை அழிக்கப்படவேண்டிய சொல் .நான் சில பதிவுகளில் கற்பு என்ற வார்த்தையை பயன்படுத்தியத்திற்கு வருந்துக்குறேன்
~தமிழரசன் இராணி
Comments
Post a Comment