சீமை கருவேலமரத்தில் முதலாளித்துவ சார்பு அரசியல்
சீமை கருவேலமரத்தில் முதலாளித்துவ சார்பு அரசியல்: அன்று இலவச எரிவாயு இணைப்பை கொடுத்து எரிவாயு சிலிண்டெர்க்கு மானியம் கொடுத்து ,கொடுத்து பெரும்பாலான மக்களை எரிவாயு சமையல் முறைக்கு மாற்ற முயற்சி செய்துகொண்டிருந்த, அதேவேளையில் சீமை கருவேலமரம் எதிர்ப்பு பிரச்சாரம் பரவிவிடப்பட்டது . மேலும் மக்கள் உபயோகப்படுத்தப்படாமல் இருக்க, கருவேலமரத்தை வெட்ட தடை விதிக்கப்பட்டிருந்தது .கருவேலமரம் மிக சிறந்த எரித்திரனுடைய பொருள் இதன் சிறப்பு அம்சமென்னவென்றால் இது பச்சயாக இருக்கும் போது கூட சிறப்பாக எரியும். மழைக்காலத்திலும் பிரச்சனை இல்லை .இதில் அதிகளவு கார்பனும், லிக்ணைனும் உள்ளதே காரணம் .இதன் திறன் 20% ஆக இருக்கும் போதே சமையலை சிறப்பாக முடித்தது வளிமயமாக்கல் (gasification) மூலமாக இதன் திறனை 50-ஆகா உயர்த்தினாலே LPG- க்கு இணையான ஆற்றலை பெற முடியும் .இதனால் சுற்று சூழல் பாதிப்பும் குறைவு .நாம் என்ன செய்திருக்க வேண்டும். இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கருவேலமரத்தின் திறனை வளிமயமாக்கல் (gasification) மூலமாக எப்படி முழுமையா செயற்படுத்த முடியும் என்றுதானே சிந்திக்க வேண்டும் .அதற்கான வடிவமைப்பை உருவாக்க வேண்டும். எவனோ வடிவமைத்த பொருளை உபயோகித்தால் நாம் made in india- வாகத்தான் இருப்போம் #Design_in_India -வாக மாறமுடியாது . அம்மிக்கு மாற்று எப்படி மிக்சியாக முடியும் .அம்மி அரைக்கும், மிக்சி சிறு சிறு துண்டுகளாக வெட்டும் .அப்பறம் எப்படி அதே சுவை வரும். நாம் #design_in_india -க்கு முக்கியதுவம் கொடுத்திருந்தால் அம்மிக்கு மாற்று வந்துருக்கும் .நிலைமை இப்படி இருக்க தன் மீது கொண்ட முள்ளை தவிர எந்த தவறும் செய்யாத கருவேல மரத்தை அழிக்க அரசே உத்தரவு போட்டுருப்பதேன் .முதலாளித்துவத்தை நோக்கியே இந்த நாடு முன்னேறி கொண்டு இருக்கிறது. இந்த அரசின் நோக்கம் நம் அணைவரையும் எரிவாயு உபாயகப்படுத்தவைப்பது .அதன் விளைவே இன்று எரிவாயு மானியம் ரத்தம் கருவேலமரம் அழிப்பும் என்பதை உணரமுடிகிறது .விவசாயத்தை ஊக்குவிப்பதை தவிர்த்து விட்டு அத்தியாவிசிய பொருட்களை இலவசமாக கொடுத்த அரசு மெல்ல விவசாயத்தின் தேவையை குறைத்தது. இன்று விவசாயம் மறந்து ரேஷன் கடையை நம்பும் சூழலில், அரசு ரேஷன் பொருட்களை வாங்க கட்டுப்பாடுகளை விதித்து நம்மை லாவகரமாக கார்பொரேட் புதைகுழியில் தள்ளிவிட்டு முதலாளித்துவத்திற்கு உரமிட்டு வருகிறது .
Comments
Post a Comment