தமிழர் பண்பாடு, கலாச்சாரம்


தமிழர் பண்பாடு, கலாச்சாரம் என்ற பதம் அடிக்கடி நமது இயல்பான வாழ்க்கையில் மூக்கை நுழைத்து குழப்பத்தை  ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது.நாம்  கலாச்சார வரையறையில் இருந்து சற்று விலகினாலும்  "தமிழ் கலாச்சாரம் காற்றில் பறக்கிறது பாருங்கள்" என்று புலம்புகிறார்கள்  . உண்மையில் அப்படி ஒரு வரையறை இருக்கிறதா ?? பண்பாடு, கலாச்சாரம் என்பது காலஓட்டத்தில் மாறிக்கொண்டே இருக்கும்.அணைத்து பழக்க வழக்கங்களும் பரிணாம மாற்றம் அடைந்து வருவதை மறுக்கமுடியாது . இத்தனை வருட மாற்றத்தில் எதை தமிழ் பண்பாடு, கலாச்சாரம் என்று கூற வருகிறீர்கள் .நீங்கள் கூறும்  வரையறை படி நம் முன்னோர்கள் வாழ்ந்தார்களா என்றால் பதில் இல்லை. உதாரணமாக பலதார மனமுறை சாதாரணமாக நடந்துள்ளது. "ஆம்பள எத்தனை பேரு  கூடவேன போவான்" என்ற சொல்லலாடல் பெண்களிடமிருந்தே வந்துள்ளது .நமது தாத்தா பாட்டி கூட பிறந்தவர்கள் எத்தனை பேரு என்று கேப்போமேயானால் பெரும்பாலும் 5-க்கு குறையாமல் பதில் வரும். 5-க்கு மேற்பட்ட குழந்தையை பெற்றத ஆண் மகனின் வீரமாக பாக்கப்பட்டதும் ,இதுவே ஆண் குழந்தையாக இருந்தால் மீசையை முறுக்கி கொண்டு "சிங்க குட்டி" பொறந்துருக்கான் என்று திரிந்தவர்களும் உண்டு. சிங்கம்னாவே ஆண் என நினைக்கும் மூடத்தனம் இது.ஒருவனுக்கு ஒருதினு வாழணும்னுதான் எல்லாரும் விரும்புகிறார்கள் ஆனால் எதிர்பாராத விதமாக பிரிய நேர்ந்தால் அது கலாச்சார சீர்கேடு என்று கூறிவிட முடியாது. உடை விசியத்தில்தான்  தமிழ்  கலாச்சார காவலர்கள் மிக கவனம் செலுத்துகிறார்கள் .அதும் பெண்களின் உடை மீது அப்படி ஒரு கவனம் செலுத்துவார்கள்.உடை என்ற தனிமனித உரிமையில் எதற்கு மூன்றாமவர் கம்பு சுத்த வேண்டும் .ஏன் மாறிக்கொண்டே இருக்கும் ஒன்றை தமிழர் கலாச்சாரம் பண்பாடு என கொள்ள வேண்டும். இந்த மாதிரியான பழமைவாதத்தை அனுமதிக்க முடியாது.சுயமரியாதை ,மற்றவரை பாதிக்காத தனிமனித உரிமை, தனிமனித சுதந்திரத்திற்கு  முக்கியத்துவம் அளிப்பதே நமது கடமையாக கொள்ளவேண்டும் என விரும்புகிறேன்          

Comments

Popular posts from this blog

சமஉடைமையும், சமஉரிமையும் :

மிக பெரிய சமூக ஆபத்து

ஒரு பெண்ணின் இறப்பில் கூட சாதிய தேடி, வன்மத்தை காட்டும் மலம் தின்னும் மனசாட்சி இல்லாத மனித கொரங்குங்களா??