பெரியார் எதிர்ப்பு ஏன் ??

பெரியார் எதிர்ப்பு ஏன் ??              பெரியார் இறந்து 44 வருடங்கள் ஆனாலும் அவரை பற்றிய எதிர்ப்பு பிரச்சாரம் அரங்கேறிக்கொண்டேவருகிறது  .ஆம், பெரியாருக்கு எதிர்ப்பு இல்லையென்றால் தான் ஆச்சிரியப்படவேண்டும்.பெரியார் சுயமரியாதை இயக்கம் எதிர்ப்பில்தான் ஆரம்பித்தார் .அவர் சென்ற இடமெல்லாம் எதிர்ப்புதான் .அவர் பேசிய வார்த்தைக்கெல்லாம் எதிப்புதான். அவரின் வாழ்க்கை எதிர்ப்பில் தொடர்ந்தது. இந்த எதிர்ப்பு  பிரச்சாரம் பெரியாரை பலருக்கு அறிமுகப்படுத்திருக்கும். யாருடா இந்த தாடி கிழவன் என்று அவரை பத்தி  படிக்க ஆரம்பித்து பெரியாரை புரிந்துகொண்டவர்கள் பலர் .பெரியாரை எதிர்ப்பவர்கள் வெறும் கற்பனை கதைகளை புனைந்து பேசுவது அவரை படித்தவர்களுக்கு  புரியும் .பெரியாரின் கூற்றை நேரிடைய எதிர்க்க திராணி இல்லாதவர்களே இப்படி கற்பனை கதைகளை புனைந்து பேசி மொக்கை வாங்கி கொள்வார்கள்  .இறுதி மூச்சு அடங்கும் வரை மூத்திர சட்டியுடன்  பெரியார் மக்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டே இருந்தார். அவர் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள், 3 மாதங்கள், 7 நாட்கள். பெரியார் சுற்றுப் பயணம் செய்த தூரம் - 8,20,000 மைல்கள். பூமியின் சுற்றளவைப் போல் 33 மடங்கு. பங்கேற்ற நிகழ்ச்சிகள் 10,700. உரையாற்றிய நேரம் - 21,400 மணி நேரம். அத்தனை சொற்பொழிவுகளையும் பதிவுசெய்து ஒலிபரப்பினால், 2 ஆண்டுகள், 5 மாதங்கள், 11 நாள்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.இந்தளவுக்கு மக்களுக்காக போராடிய பெரியாரை எதிர்க்க நீங்கள் வைக்கும் எதிர்ப்பு வாதம் பத்தவில்லை .உங்கள் வேகம் பத்தவில்லை. பெரியாரை இன்னும் நன்றாக எதிர்த்து பேசுங்கள் negative marketing மூலம் அவர் அனைவரிடமும் சென்று சேருவர்.

Comments

Popular posts from this blog

சமஉடைமையும், சமஉரிமையும் :

மிக பெரிய சமூக ஆபத்து

ஒரு பெண்ணின் இறப்பில் கூட சாதிய தேடி, வன்மத்தை காட்டும் மலம் தின்னும் மனசாட்சி இல்லாத மனித கொரங்குங்களா??