இன்று உலக பெண் குழந்தை தினம்

இன்று உலக பெண் குழந்தை தினம் , 21 ஆம் நூற்றாண்டில் வாழும் நம்மிடையே இன்னும் பாலின பாகுபாடு (gender stereotypes) வேரூண்டிஉள்ளது .
பெண் பிறபதில்லை ,மாறாக உருவாக்கபடுகிறாள்,என்றார் பிரபல பெண்ணியவாதி சிமோன் டி.ஆம் இதை நாம் குழந்தை பிறந்ததிலருந்தே தவறாமல் செய்கிறோம்.
.ஆண் குழந்தைக்கு கார் ,டைனோசர் போன்ற பொம்மைகளை தருவதிலும்,பெண் குழந்தைக்கு மரபாச்சி,பார்பி போன்ற மென்மையான பொம்மைகளை வாங்கி தருவதில் ஆரம்பிக்குறது இந்த பிரச்சனை.
பெண் குழந்தை சமைபதற்கும்,துவைபதற்கும் ,கோலம் போடுவதற்கும் ஊக்குவிக்கபடுகிறாள்.வீட்டு வேலைகளை செய்ய ஒரு இனதையே அடிமை படுத்துவதா?? என்ன கொடுமைஎன்றாள் பெண் இதை செய்வதுற்கு சின்ன பாராட்டு கூட கிடைபதில்லை..
பெண்ணால் எல்லாம் முடியும் என்பதை கல்பனா சாவ்லா ,மூரி கோம் ,சானியாமிர்சா ,சாய்னா என பலர் செய்து காட்டி உள்ளனர்.ஊடகங்களில் காட்டுவது போல பெண்கள் அலங்கார பொம்மைகள் அல்ல.ஆண்கள் விரும்பும் பெண்ணாக இல்லாமல் நீங்கள் விரும்பும் பெண்ணாக இருங்கள் .
உங்கள் பெண் குழந்தை ஆண் தான் வலிமையானவன் என்னால் இதை தூக்க முடியாது என சொன்னால் ..நீயும் வலிமையானவள் உன்னாலும் முடியும் என ஊக்க படுத்த வேண்டும் .
இங்கே பெண் வலிமையற்றவர்களாக சித்தரிக்கபடுக்கிறாள் .இதனால் அவள் தன் பாதுகாப்பிற்கு ஆண் துணை தேவை படுவாத எண்ண காதல்,நட்பு என்ற பெயரில் தவறான சிலரின் வன் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்(நேர்மையான நப்பு மற்றும் காதலை நான் குறிப்பிடவில்லை) .மேலும் stalking மூலம் கொல்ல படுகிறாள்..இந்தியாவில் 5 ல் 4 பெண்கள் சமூக சீண்டலுக்கு ஆளாகுறார்கள் என்கிறது ஒரு சர்வே .
பெண்ணை வலிமையானவளாக ஒருவாக்குவதால்,இது போன்ற சமூக அவலங்களில் இருந்து தம்மை தற்காத்து கொள்ள முடியும்.பெற்றோரே சிந்திப்பீர்..உங்கள் மகளின் எதிர்காலம் உங்கள் கையில் .பாலின பாகுபாடை உடத் தெரிந்து ,சமத்துவம் பயில்வோம் .
#educate_girl_child
#break_gender_stereotypes
#tamizh

Comments

Popular posts from this blog

சமஉடைமையும், சமஉரிமையும் :

மிக பெரிய சமூக ஆபத்து

ஒரு பெண்ணின் இறப்பில் கூட சாதிய தேடி, வன்மத்தை காட்டும் மலம் தின்னும் மனசாட்சி இல்லாத மனித கொரங்குங்களா??