பெற்றோரிடமிருந்து கணவனை வலுக்கட்டாயமாக பிரிக்கும் மனைவியை விவாகரத்து செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு: இது சரியா??? எனது பார்வையில்,

பெற்றோரிடமிருந்து கணவனை வலுக்கட்டாயமாக பிரிக்கும் மனைவியை விவாகரத்து செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு:
இது சரியா??? எனது பார்வையில்,
இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் ஏராளமான ஆதரவுகள்.தவறுதான் மக்களே….. பெற்றோரிடம் இருந்து மகனை பிரிப்பது .இதனால் கணவனின் பெற்றோர் வயதான காலதில் கவனிக்க நாதி இல்லாது தவிப்பார்.எல்லாம் சரிதான் பா.இங்கே பல நூற்றாண்டு காலமாக பெண் தன் பெற்றோரை விட்டு கணவன் வீட்டில் வாழும் வழக்கம் உள்ளது.இந்தியாவில் 99% திருமணம் இப்படிதான் நடக்கிறது .
ஆண் மகன் இல்லாமல் ,பெண் மகளை மட்டுமே பெற்ற பெற்றோரது இறுதி காலம்,அவர்கள் படும் இன்னல்கள் ,கவனிபாரற்ற நிலைய பற்றி யாராவது யோசித்தார்களா? ,அதற்கு இந்திய அரசியல்லமைப்பு சட்டதில் வழி இருக்குறதா? இதற்கு தீர்வுதான் என்ன ? பெண்ணை பெற்றதை தவிர வேறென்ன தவறு செய்தனர்.இதை பற்றி யாருமே பேசுவதில்லை என்பது மிக பெரிய கொடுமை .
இது மிக கொடிய பெண் சிசு கொலைக்கு காரணாகிறது.ஆண்தான் கடைசி வரைக்கும் சோறு போடுவானாம்.(2011 censes gender ratio per 1000 male ,hariyana-877,Punjab-893,UP-908,Bihar-916,Gujarat -918 females) பெண் சிசு கொலையின் தாக்கதை புள்ளி விவரம் சொல்கிறது.
பெண்ணை அவளின் பெற்றோரிடம் இருந்து பிரித்து வரதட்தனை எனும் பிச்சை வாங்கி தன் பெற்றோரிடம் வாழும் கணவனுக்கு அவளின் வலியும் ,வேதனையும் தெரியாவில்லை.ஆனால் இப்போ அவனுக்கு நடக்கும் போது விவாகரத்து வரை போகிறான்.நீதி மன்றமும் ஆமாம் சாமி போடுகிறது.ஆணாதிக்கம் இன்னம் ஒழிந்தார்பாடில்லை.
கணவனை பெற்றோரிடமிருந்து பிரிக்கும் மனைவிக்கு விவாகரத்து சரியென்றால்..பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருக்கும் வழக்கதில் பெற்றோரிடம் இருந்து பிரிந்து வாழும் பெண்ணிற்கு தீர்ப்பு என்ன ??? அவள் நீதி மன்றம் சென்றால் விளைவு???.
.இந்திய அரசிலைமைப்பு சட்டம் பிறப்பால் ஆணும் பெண்ணும் சமம் என்கிறது.ஆணின் பெற்றோர்க்கு செய்யும் கடமைகளில் பாதியாவது பெண்ணின் பெற்றோர்க்கு செய்ய வேண்டாமா? . தனிகுடிதனம் செல்வது அவரவர் உரிமை சார்ந்தது.அதே நேரத்தில் தாய்,தந்தையர் செய்த தியாகத்தை மறக்கலாகாது.
பெற்றோர்க்கு செய்ய வேண்டிய கடமையை பற்றி சட்டம் வகுப்பதும்,அதை நடைமுறை படுத்துவதுமே நீநிமன்றதின் கடமை.அதனால் இந்த தீர்ப்பை பெண்ணை பற்றிய பாகுபாடான(stereotype)தனிமனிதனின் தீர்பாக கருதுகிறேன்.எனவே இருபாலரும் வரும் காலத்தில் பொற்றோரை அனாதையாக்க மாட்டோம் என இப்போதே உறுதி கொள்வோம்.
-தமிழரசன்.இரா #சமத்துவம்_பயில்வோம்

Comments

Post a Comment

Popular posts from this blog

சமஉடைமையும், சமஉரிமையும் :

மிக பெரிய சமூக ஆபத்து

ஒரு பெண்ணின் இறப்பில் கூட சாதிய தேடி, வன்மத்தை காட்டும் மலம் தின்னும் மனசாட்சி இல்லாத மனித கொரங்குங்களா??